வடகிழக்கு சீனாவில் கனமழையால் பாடசாலை ஒன்றின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏறக்குறைய 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது, நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உடற்பயிற்சிக் கூடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்களில் பலர் சிறுவர்கள் என நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.
குறித்த சம்பவத்தையடுத்து, ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் கிகிஹார் நகரில் உள்ள கட்டிடத்தின் பொறுப்பாளரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்தின்போது, விபத்தில் சிக்குண்ட நான்கு பேர் தப்பியோடியதாகவும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 15 பேரில் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கூரை மீது குவிக்கப்பட்டிருந்த எரிமலைக் கண்ணாடியின் ஒரு வடிவமான பெர்லைட், மழைநீரில் நனைந்ததால், கூரை சரிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.