கிரேக்க தீவான கோர்புவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத்தீயினால் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீ தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
காட்டுத் தீயை அடுத்து, கிரேக்கத்தின், சான்டா, மெகுலா, போர்டா, பாலியா, பெரித்தியா மற்றும் சினிஸ் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் கடல் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இதுவரை நாடு முழுவதும் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிரேக்க தீவின் மையத்தில் இருந்து தீப்பிழம்புகள் தொடர்ந்து பரவுவதால் பலர் தங்கள் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
காட்டுத் தீயை அடுத்து, நாடு முழுவதும் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை விட அதிகமாக உள்ளதாகவும், சில பகுதிகளில் ஒரு வாரமாக தீ எரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் இன்று திட்டமிடப்பட்டிருந்த ஒரு தேசிய விடுமுறை தீயினால் நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிரேக்க ஜனாதிபதி தெரிவித்தார்.