சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய கின் கேங் அந்த பதவியில் இருந்து பணி நீக்கம் செயபட்டுள்ளார்.
இவர் 7 மாதங்கள் மட்டுமே சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக சீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் வாங் யீ நியமிக்கப்பட்டுள்ளார்.
கின் கேங் கிற்கு வழங்கப்பட்ட புதிய பதவி தொடர்பான அறிவிப்பு இன்னமும் வெளியாகாத நிலையில், அவரின் பதவி மாற்றத்திற்கு உடல்நலம் மற்றும் அரசியல் காரணங்களை சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு பொலிட்பீரோவுக்கு பதவி உயர்வு பெற்ற வாங் யீ , கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய வெளியுறவு ஆணையத்தின் தலைவராக இருந்ததோடு, தற்போது மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சராகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.