சீனாவின் பௌத்த ஆலயத்தில் தீ விபத்து – புத்தர் சிலை சேதம்

சீனாவின் கன்சு மாகாணத்தின் ஷாந்தன் கவுண்டியில் உள்ள பௌத்த ஆலயத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 115 அடி உயரமுடைய பிரம்மாண்ட புத்தர் சிலை சேதம் அடைந்துள்ளது.

கி.பி. 425 ஆம் ஆண்டு காலத்தை சேர்ந்த சிலை ஒன்றை பிரதிபலிக்கும் முகமாக இந்த புத்தர் சிலை செய்யப்பட்டதாகவும், சிலையின் ஒரு பகுதி மட்டுமே தீயில் கருகி சேதமடைந்துள்ளதாகவும், எஞ்சிய பகுதி பாதிப்படையாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் கட்டமைப்புகள் தீயில் அழிந்துவிட்டதாகவும், ஆனால் ஆலயத்தின் கலாச்சார நினைவுச்சின்னங்கள் சேதமடையாமல் இருப்பதாகவும் சீனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், விபத்துக்காண காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply