நைகர் ஜனாதிபதி கைது

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைகரின் ஜனாதிபதி முகமது பாசும் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளதோடு,  இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

நைகர் ஜனாதிபதி முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் நேற்று அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நைகரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜனாதிபதிக்கு ஆதரவாக தலைநகர் நியாமியில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தைக் கலைக்க இராணுவ வீரர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அங்கு மறு அறிவித்தல் வரை ஊடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply