சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக மனித உரிமை வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு 30 கிராம்ஹெராயின் கடத்தியதாக 45 வயதான சிங்கப்பூர் நாட்டவர் சரிதேவி டிஜமானி என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேறியுள்ளது.
இஸ்லாமிய நோன்பு மாதத்தில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஹெராயினை பதுக்கி வைத்திருந்ததாக சரிதேவி தனது விசாரணையின் போது சாட்சியமளித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன. அவை சமுதாயத்தைப் பாதுகாக்க அவசியம் எனக் கூறப்படுகின்றது.
சிங்கப்பூர் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயின் மற்றும் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும்.
கடந்த ஏப்ரல் மாதமும், மற்றொரு சிங்கப்பூரர் , மொபைல் போன் மூலம் கஞ்சாவை விற்பனை செய்ததற்காக தூக்கிலிடப்பட்டார்.
சீனா, ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுடன், சமீபத்தில் போதைப்பொருள் தொடர்பான மரணதண்டனைகளை நிறைவேற்றிய நான்கு நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்று சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.