சுகாதார அமைச்சில் பணிபுரியும் அனைத்து நிர்வாகப் பணியாளர்களுக்கும் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து பணியாளர் தர உத்தியோகத்தர்களும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி தொடக்கம் தங்கள் தினசரி வருகை மற்றும் புறப்பாடு குறித்து குறிப்பிட வேண்டும்.
இது உள் குறிப்பேடு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, இந்த புதிய நடவடிக்கை வருகைப் புத்தகத்திற்குப் பதிலாக அமையும் எனவும், இது சுகாதார அமைச்சில் பணிபுரியும் மருத்துவ நிர்வாகிகள் உட்பட அனைத்து பணியாளர் தர அதிகாரிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
புதிய நடவடிக்கை கூடுதல் கடமை மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளுக்கு எந்த அலுவலர்கள் தகுதியுடையவர்கள் என்பதை துல்லியமாக தீர்மானிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி, அமைச்சரவைக் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டபடி, அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் கடமை கொடுப்பனவுகளை இது உறுதி செய்கிறது என அவர் அடிக்கோடிட்டுக் கூறினார்.