மனித உரிமைகள் ஆணைக்குழு பணியாளர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், குறித்த குறைபாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆணைக்குழுவில் பணியாளர்கள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் ஜனாதிபதி முன்னிலையில் தெளிவுபடுத்தப்பட்டது.

அதற்குரிய தீர்வுகளை விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறும், அதனூடாக ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply