பாலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் ஃபதா இயக்கத்திற்கும் இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
இறந்த ஆறு பேரில் ஒரு ஃபதா தளபதியும் உள்ளடங்குவதாக இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த முகாம் 1948 இல் நிறுவப்பட்டதாகவும் அங்கு 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அகதிகளுடன் கூடிய மிகப்பெரிய முகாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.
தெற்கு நகரமான சிடோனுக்கு அருகில் அமைந்துள்ள இந்த முகாம் லெபனான் பாதுகாப்புப் படைகளின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ளது.
இதனையடுத்து, லெபனானில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் இயக்குனர் டோரோதி க்ராஸ், முகாமில் உள்ள அனைத்து ஏஜென்சி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மோசமான வாழ்க்கை நிலைமைகளைக் கொண்ட நாட்டின் 12 அகதிகள் முகாம்களில் பாதி பேர் வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.