ரஷ்யா தொடங்கி வைத்த யுத்தம் படிப்படியாக ரஷ்யாவுக்கே திரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அது இயல்பானது எனவும் தவிர்க்க முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ மீது உக்ரைனின் மூன்று டிரோன் தாக்குதலை நடத்தியதில் இரண்டு அலுவலக கட்டங்கள் தீப்பிடித்து சேதம் அடைந்தன.மேலும் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்தது.
இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லையென்றாலும், மாஸ்கோ முழுவதும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ரஷ்யா யுத்தம் தொடங்கி 522 நாட்களான நிலையில், யுத்தக் களத்தில் ரஷ்யா திவாலாகி விட்டது என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் ரஷ்யாவின் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.