சென்னை முட்டுக்காடு அருகே 4 பறக்கும் தட்டுகள் ஒரே நேரத்தில் பறந்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறக்கும் தட்டில் வேற்றுகிரக வாசிகள் வந்தார்களா? என்ற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆராய தொடங்கியுள்ளனர்.
சென்னை முட்டுக்காடு பகுதியில் ஒரே நேரத்தில் 4 பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக தமிழக முன்னாள் டிஜிபியாக பணியாற்றி ஓய்வுபெற்றவரும், பிரண்ட்ஸ் ஆஃப் பொலிஸ் நிறுவனருமான ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 26ம் திகதி தனது மனைவியுடன் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் தங்கியிருந்த போது மாலை 5.30 மணியளவில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நான்கு பறக்கும் தட்டுகளை கண்டதாக தெரிவித்துள்ளார்.
அவை தற்போது பயன்பாட்டில் உள்ள ட்ரோன்கள் போன்ற ஆளில்லா பறக்கும் குட்டி விமானம் அல்ல என கூறும் முன்னாள் டிஜிபி பிரதிப் வி பிலிப், 20 முதல் 25 விநாடிகளுக்குள் மறைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனை தனது செல்போன் மூலம் படம் எடுத்ததாக கூறியுள்ளார். அதனையும் வெளியிட்டுள்ளார்.