சினோபெக் முதலாவது எரிபொருள் சரக்கு வெளியேற்றும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும், இரண்டாவது சரக்கு நாளை நாட்டிற்கு வரும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சந்தையில் புதிய சில்லறை விற்பனையாளர்களின் நுழைவு பெட்ரோலியப் பொருட்களுக்கான அந்நிய செலாவணி தேவைகளை எளிதாக்கும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு இறுதி செய்யப்பட்டவுடன், சினோபெக் நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் சில்லறை பெற்றோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.