ஹல்லாஜ் தகவல் வள நிலைய கேட்போர் கூடத்தில் விழுமியம் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை அஷ்ஷேக்.ஏ.ஜீ.ஏ.றவூப் தலைமையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் வை.றாசீத் அவர்களும், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.தெளபீக், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிராந்திய பொறுப்பாளர்கள், கல்வியியலாளர்கள், உலமாக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இச்சஞ்சிகை தொடர்பில் விசேட உரையாற்ற வளவாளர்களாக கலந்து கொண்ட கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் எம்.ரீ. ரிஸ்வி மஜீதி வாசிப்பு எனும் தலைப்பிலும், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அப்துல் றசாக் விழுமியம் சஞ்சிகை ஒர் குறுக்கு வெட்டு பார்வை எனும் தலைப்பிலும் உரையாற்றியதோடு, சஞ்சிகையின் பிரதிகளும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு ஏற்பாட்டுக்குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.