
யாழ்ப்பாணம் பலாலி விமானப்படை முகாமில் அமைந்துள்ள கொவிட்-19 பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 100 பேர் இன்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
மத்திய கிழக்கு நாட்டவர்களான இவர்கள் குறித்த முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கொவிட் -19 தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.