அமெரிக்காவில் அதிகரித்த பிளாஸ்டிக் குப்பைகள் – அமெரிக்கா விதித்த கட்டுப்பாடு

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி தொன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 95 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயோர்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விடுதிகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் போத்தல்கள், கரண்டி மற்றும் கத்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறும் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளின் பயன்பாட்டைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply