தண்ணீரில் தூக்கி வீசப்பட்ட புலம்பெயர்வோர்

பிரான்சிலிருந்து சிறு படகொன்றில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்ட புலம்பெயர்வோரில் சிலர் தண்ணீரில் தூக்கி வீசப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பிரான்சிலுள்ள Calais பகுதியிலிருந்து சிறு படகொன்றில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புலம்பெயர்வோர் சிலர் புறப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடத்தல்காரர்கள் அவர்களை படகில் ஏற்றியுள்ளார்கள். அப்போது, படகில் இடம் போதாததால், படகிலிருந்த மக்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உடனே, ஆத்திரமடைந்த கடத்தல்காரன் ஒருவன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள் உட்பட புலம்பெயர்வோரில் சிலரை தண்ணீரில் தூக்கி வீசியுள்ளான்.

இந்த சம்பவத்தை பிரான்ஸ் உறுதிசெய்துள்ளது. பிரான்ஸ் தரப்பிலிருந்து அவசர உதவிக்குழுவினர் சென்று தண்ணீரீல் தத்தளித்தவர்களை மீட்டுள்ளனர்.

கடத்தல்காரர்கள் பெரும் தொகை பணத்தையும் பெற்றுக்கொண்டு புலம்பெயர்வோரை ஆபத்தான முறையில் சிறு படகுகளில் அனுப்புவதுடன், அவர்களை தண்ணீரில் தூக்கி வீசும் அளவுக்கு இரக்கமற்ற வகையில் நடந்துகொள்வதாக வெளியாகியுள்ள தகவல் கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply