கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டு விழா கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் ஒட்டிசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராஜா சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். உள்ளத்தனையது உயர்வு என்ற பொருளில் உரையாற்றிய அவர் ஆசிரியர்கள் மாணவர்களது நிலையை அறிந்து செயல்பட வேண்டும் நேர்முகமாக சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என இதன்போது கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வினை கலாசாலையின் உடற்கல்வி பாடநெறி ஆசிரிய மாணவி எலிசபெத் கொட்பரினா கென்றி தலைமை தாங்கினார்.
அதிதி அறிமுக உரையினை விரிவுரையாளர் ந.அனந்தசயனன் அவர்களும் உடற்கல்விநெறி ஆசிரிய மாணவன் இ.இராஜகோகுலன் போதைப்பொருள் பாவனையை தடுப்பதில் ஆசிரியர்களின் பங்கு என்னும் தலைப்பிலும் உரையாற்றியிருந்தனர்.
நிகழ்வில் அதிதிப் பேச்சாளர் நாகேந்திரராஜா கலாசாலை அதிபரால் கௌரவிக்கப்பட்டார்.