சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 140 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது.
கடந்த 1891 ஆம் ஆண்டுக்குப் பிறகு பீஜிங் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கடந்த ஜூலை 29 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை 29 அங்குலத்திற்கு மழை பெய்துள்ளதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோக்சுரி புயல் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாகவும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
பீஜிங் நகரில் இருந்து 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் வெள்ளத்தில் சிக்கி காணமல்போனவர்களைத் தேடும் பணிகளை தீவிரப்படுத்துமாறு மீட்புப் படையினருக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார்.