இணக்கமாகச் செயற்படும் கட்சிக்குள் விருப்பு வாக்கு முறைமை முரண்பாட்டைத் தோற்றுவிக்குமென பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த நல்லாட்சி அரசாங்கம், குடும்பமொன்றை இலக்கு வைத்து 19ஆவது திருத்தத்தை அரசியலமைப்பில் கொண்டு வந்தது.
ஆனால் இந்த திருத்தம் கடந்த அரசாங்கத்தில் பல முரண்பாடுகளை தோற்றுவித்தன. இவைகளை நாம் அவதானிக்க கூடியதாகவும் இருந்தது.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு மிகவும் அவசியமான தேவைப்பாடாக காணப்படுகின்றது.
ஆகவே, 19ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு முரண்பாடற்ற விதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்க தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.