ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஐந்து கிராம் மைக்ரோபிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் – ஊட்டச்சத்து நிபுணர்

ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஐந்து கிராம் மைக்ரோபிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் எனவும் இது ஒரு கிரிடிட் கார்டின் அளவு எனவும் ஊட்டச்சத்து நிபுணர்  ரொஷான் டெலா பண்டார தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார,

ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நாம் உட்கொள்ளும் உணவு, குடிநீர் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் கலப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஐந்து கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு கிரெடிட் கார்டின் அளவு. அதன்படி, ஒரு மாதத்தில் 20 கிராம் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நுகரப்படுவதோடு, வருடத்திற்கு 250 கிராம் நுகரப்படுகிறது என்றார்.

இதற்கிடையில், இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் சஜித் எதிரிசிங்க தெரிவிக்கையில், நைலோன் துணி மற்றும் நைலோன் மீன்பிடி வலைகள் என்பன மைக்ரோபிளாஸ்டிக் நமது உடலுக்குள் செல்வதான முக்கிய காரணம் என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன என்றார்.

பெரும்பாலான மைக்ரோபிளாஸ்டிக் நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் நம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது என்றார்.

மேலும், மைக்ரோபிளாஸ்டிக்கை அதிகமாக உட்கொண்ட பிறகு, அதன் விளைவு புற்றுநோயாக இருக்கலாம் என்றார்.

எனவே, பிளாஸ்டிக் பொருட்களை தாங்களாகவே அழிக்காமல், மறுசுழற்சி செய்யக்கூடிய மையங்களில் ஒப்படைக்குமாறு மருத்துவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்கள், அதிக எண்ணிக்கையிலான நச்சு இரசாயனங்கள் மற்றும் வாயுக்களை வெளியிடுவதால் அவற்றை எரிக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply