எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்கும் எண்ணம் எமக்கு இல்லை எனவும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொதுவேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் தகுதியான ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்குவோம் அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவை உருவாக்கியவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அவரின் தலைமையிலேயே கட்சி இயங்கிவருகிறது எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷ பொது வேட்பாளராக களமிறக்கட்படலாம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.