திருப்பணிகள் தொடர்பாக அறிவிக்கும் பத்திரிக்கையாளர்கள் மாநாடு

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவில் புனருத்தாரண திருப்பணிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர்கள் மாநாடு நேற்று காலை 11 மணியளவில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கல்லடியில் சுவாமி தக்க்ஷயானந்தா பொது முகாமையாளர் தலமையிலும் உதவி பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர்ருடன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கலந்து கொண்டு நடைபெற்றது.

ராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளையானது சுவாமி விபுலானந்தரின் காலத்தில் மிகவும் அரிய நிலையமாக ஆரம்பிக்கப்பட்டதுடன் 26 பாடசாலைகளையும் இலங்கையில் எல்லாப்பாகங்களிலும் நிறுவினார் அவைகள்தான் இன்று பலவிதமான கல்விசெயற்பாடுகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பரப்பிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று உலக நாடுகளில் 24க்கு மேற்ப்பட்ட நாடுகளில் 260க்கு மேற்ப்பட்ட கிளைகளை நிறுவி ராமகிருஷ்ணர மிஷன்கள் மற்றும் மடங்கள் சிறந்த ஆன்மிகப்பணியினை செய்து வருகின்றது இப்பணிகளுக்காக இரண்டாயிரத்திற்கும் அதிகமான துறவிகள் மக்களுக்கான ஆன்மீக பயிற்சிகளையும் செற்பொழிவுகளையும் தியானத்தினையும் நல்கிவருகின்றதாகவும் சுவாமிகள் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு கல்லடியில் இயங்கிவருகின்ற மிஷன் மாணவர்களுக்கான கல்வியும் ஆன்மீகத்தினையும் பொதித்துவந்தது தற்போது மக்களுக்கான ஆன்மீகப்பணியினையும் முன்னெடுப்பதற்கு திர்மானித்துள்ளது. நூறு ஆண்டு களைகடந்தவரலாற்றை கெண்டது இந்த மிஷன் இங்கு அமைந்துள்ளகோயில் அறுபது ஆண்டுகளுக்குப்பின்னர் புனரமைக்க ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருள்பாலித்துள்ளார் கடந்தகாலத்தில் 150பேர் மாத்திரம் தியானம் செய்யும் அளவுதான் இருந்தது தற்போது புதிதாக அமைக்கப்பட்டுக்கொன்டிருக்கின்ற கோவிலானது 500பேர் இருந்து தியானங்கள் வழிபாடுகளை செய்யும் வகையில் அமைக்கவுள்ளோம் அனைந்து அடியார்களும் ஸ்ரீ ராமகிருஷ்ண பகவாணின் கோவில் சிறக்க தங்களால் முடிந்த காணிக்கைகளை வழங்கி உதவுமாறும் சுவாமிகள் வேண்டுகொள்விடுக்கின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir