2030 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிக்கு கனடாவின் ஆல்பர்ட்டா அரசாங்கம் தனது ஏலத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.
அதிகரித்து வரும் செலவுகள் காரணமாகவே ஏலத்தை ரத்து செய்ததாக ஆல்பர்ட்டா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனடாவின் சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சர் ஜோசப் ஸ்கோ,மாநிலம் தாங்க முடியாத அளவுக்கு செலவுகள் அதிகமாக உள்ளதால் ஏலத்தைத் திருப்பப் பெற்றுக்கொண்டோம் என்றார்.
2026 ஆம் ஆண்டுக்கான விக்டோரியாவில் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இருந்து கடந்த மாதம் அவுஸ்திரேலியா வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.