2020 பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 38 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.
தேர்தல் சட்டத்தை மீறல் மற்றும் முறைப்பாடுகளை 0262222352என்ற தொலைபேசி இலக்கம் மூலம் அல்லது 0765318905 என்ற வட்ஸ்அப், ஃவைபர் இலக்கங்கள் ஊடாக தெரிவிக்க முடியும்.
15200 வாக்காளர்கள் அஞ்சல் வாக்காளர்களாக வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள். எதிர்வரும் 13 ம்திகதி சுகாதாரத்துறையினரும் (சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அலுவலர்கள்),14,15ம் திகதிகளில் ஏனைய அரச உத்தியோகத்தர்களும் 16,17 ம் திகதிகளில் மாவட்ட செயலகம், முப்படை மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களும் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் இம்முறை வாக்கெண்ணும் நிலையமாக திருகோணமலை விபுலானந்தாக்கல்லூரி செயற்படவுள்ளது.
மேலும் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டைஇசெல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தால் விநியோகிக்கப்படும் மதகுருமார்களுக்கான அடையாள அட்டை மற்றும் 2019 சனாதிபதித் தேர்தலில் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை தாங்கள் வதிந்துள்ள பிரிவின் கிராம அலுவலரிடம் ஒப்படைத்து புதுப்பித்த அடையாள அட்டை என்பன ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் மேற்குறித்த அடையாள அட்டையற்றவர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணைக்குழுவின் தற்காலிக அடையாள அட்டையை தாமதமின்றி பெறல் வேண்டும்.
இதற்காக தங்களது மேலுடம்பின் 2 1/2சென்றிமீற்றர் அகலத்தையும் 3 சென்றிமீற்றர் உயரத்தையும் கொண்ட வர்ண அல்லது கறுப்பு வெள்ளை புகைப்பட பிரதிகள் இரண்டுடன் தங்களது கிராம அலுவலரை சந்தித்தல் வேண்டும். தற்காலிக அடையாள அட்டைகள் கிராம அலுவலரால் ஏற்கப்படும் இறுதித்திகதியாக 2020.07.29 அமைந்துள்ளது.
அத்துடன் தெளிவற்ற அடையாள அட்டைகள்இஅமைச்சுஇ திணைக்களங்கள்இஅரச நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற புகைப்படத்துடன் கூடிய அல்லது புகைப்படமற்ற வேறெந்த ஆவணமும் வாக்கெடுப்பு நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதென்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.