நாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பினர்களை பாதுகாத்துக்கொள்வதற்கான விசேட திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தமது பாடசாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா தொற்று காணப்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுமாயின் அது தொடர்பில் அறிவிக்க விசேட தொலை தொடர்பு முறைமைகளையும் அந்த அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வி அமைச்சர் டலஸ் அழகபெருமவின் ஆலோசனையின் படி சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் மாகாண மட்ட கல்வி வலய அதிகாரிகளையும் ஒன்றினைத்து விசேட தகவல் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குவதற்கான புதிய தொலைபேசி இலக்கம் மற்றும் தொலை நகல் இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொபேசி இலக்கம்-0112785818
மின்னஞ்சல்-info@moe.gov.lk
துரிததொலைபேசி இலக்கம்-1988
மேற்குறித்த தொடர்பாடல் முறைகளில் ஒன்றின் மூலம் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக்குழு உறுப்பினர்கள் தமது பிரதேசத்தில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அறிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.