துனிசியாவில் கப்பல் விபத்து – 16 அகதிகள் பலி!

துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ளது.

ஆபிரிக்கா கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, சிறந்த வாழ்க்கையின் நம்பிக்கையில் படகுகளில் ஆபத்தான முறையில் பயணங்கள் செய்கின்றனர்.

இந்த கப்பலில் மொத்தம் 57 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், 16 பேர் உயிரிழந்த நிலையில் 44 பேரை மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அனைவரும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஐ.நா வெளியிட்ட அறிக்கையின்படி இந்த ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் துனிசியா அல்லது அண்டை நாடான லிபியாவிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply