அவுஸ்திரேலியாவில் அதிநவீன சிறுவர் பாலியல் இணைய கும்பலை சேர்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டின் மூன்று மாநிலங்களை சேர்ந்த 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த கும்பல்களுக்கும் இரண்டு எவ்பிஐ அதிகாரிகள் கொலைக்கும் தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புளோரிடாவில் சிறுவர் துஸ்பிரயோக வீடீயோக்களை விநியோகித்துக்கொண்டிருந்த டேவிட் ஹபர் என்பவரால் 2021 இல் எவ்பிஐயின் விசேடநிபுணர்களான இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் வீடொன்றை சோதனையிட முயன்றவேளை அங்கு காணப்பட்ட கணிணிதுறை சார்ந்த ஒருவர் இவர்களை சுட்டுக்கொன்றார்.
வேறு மூன்று எவ்பிஐ முகவர்கள் காயமடைந்தனர் பின்னர் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதேவேளை இது தொடர்பாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இதில் மூன்று அவுஸ்திரேலியர்களுக்கு தொடர்புள்ளதும் 13 அவுஸ்திரேலிய சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டார்க்வெப்பில் நண்பர்களான 19 அவுஸ்திரேலியர்கள் சிறுவர் துஸ்பிரயோக வீடியோக்களை பகிர்ந்துகொள்கின்றனர் என தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல்துறையினர் ஒப்பரேசன் பக்கிஸ் என்பதை ஆரம்பித்தனர்.
குற்றவாளிகள் 30 முதல் 81 வயதுடையவர்கள் கணிணி தொழில்நுட்பத்தில் மிகுந்த திறமைசாலிகள் என தகவல் வெளியாகியுள்ளது.