நியூசிலாந்து அரசாங்கத்தின் புதிய திட்டம்

மாற்றத்தை சமாளிக்கும் வகையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் தயாராக உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் காற்று, பசுமை ஐதரசன் மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதால் காபன் உமிழ்வு குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நிய முதலீடு அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் மேம்படும். எனவே இந்த திட்டத்துக்காக சுமார் 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply