ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் திருத்தம்!

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னர் 2023 முதல் 2026வரையிலான நான்கு ஆண்டுகாலப்பகுதியில் குறைந்தபட்சம் 9 வீத வட்டிவீதத்தை உறுதிசெய்யும் வகையில் ஊழியர் சேமலாபநிதி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இது கடந்த ஐந்தாண்டுகால பகுதியில் ஊழியர் சேமலாப நிதிக்குரித்தானவர்களுக்கு வழங்கப்பட்ட வருடாந்த வட்டிவீதத்தின் அடிப்படையில் அமையவுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுப்பனவு நன்மைகள் ஓய்வூதிய கொடுப்பனவுகளிற்கு எந்த சுமையும் இன்றி மக்களை சென்றடைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply