இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட ‘சினோபெக்’ நிறுவனத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ‘சினோபெக்’ நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அவற்றை மாற்றுவதற்கு தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள சட்டச் சிக்கல்களை சுட்டிக்காட்டிய விநியோகஸ்தர்கள், அவற்றில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியாருக்குரியவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சினோபெக் இந்த மாத தொடக்கத்தில் முதல் இரண்டு பங்குகளாக 42,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.