பெற்றோல் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர்!

கடந்த மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியியல் ரீதியில் இலாபம் மற்றும் நட்டமடைந்துள்ளதாகவும் 2015 ஆம் ஆண்டு 20520 மில்லியன் ரூபா நட்டத்தையும், 2016 ஆம் ஆண்டு 53027 மில்லியன் ரூபா இலாபத்தையும் ,2017 ஆம் ஆண்டு 1055 மில்லியன் ரூபா இலாபத்தையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2023 ஆம் ஆண்டுக்காக கூட்டுத்தாபனத்தின் சேவையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் ஏதும் வழங்கப்படவில்லை மாறாக 4.2 சதவீத வட்டி என்ற அடிப்படையில் புத்தாண்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெற்றோலிய விநியோகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்.இவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply