அரச வங்கிகளின் முறைகேடுகள் பற்றி  கவலை  வெளியீடு – இலங்கை வங்கி ஊழியர் சங்கம்!

அரச வங்கிகளுக்குள் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கை மறைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த அறிக்கை வெளியிடப்படாமையின் காரணமாக அரச வங்கிகளுக்குள் இடம்பெற்று வரும் ஊழல் மற்றும் மோசடிகள் வெளிவரவில்லை என மத்திய வங்கியின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அத்தகைய விசாரணை எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின்  முன்னாள் பிரதி ஆளுநர் தர்மஸ்ரீ குமாரதுங்க, புதிய பணம் செலுத்தும் கருவிகள் மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply