இலங்கையின் மூத்த எழுத்தாளர்  இயற்கையெய்தினார்!

இலங்கையின் மூத்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ஊடகவியலாளருமான அனுலா டி சில்வா தனது 82 ஆவது வயதில் காலமானார்.

அவரது பூதவுடல், எதிர்வரும் திங்கட்கிழமை பொரளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் வரை ஜயரத்ன இறுதிச் சடங்கு நிலையத்தில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அம்பலாங்கொடையில் பிறந்த அனுலா டி சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கிய எழுத்தில் தனது முதுகலைப் பட்டதாரி டிப்ளோமாவை முடித்தார்.

1964 இல் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி டி சில்வா, அதே ஆண்டில் தனது முதல் நாவலான ‘உன்மந்தகாயோ’வை வெளியிட்டார்.

அவர் பின்னர் லேக் ஹவுஸில் சேர்ந்து, “மிஹிர” குழந்தைகள் பத்திரிகையின் முழுநேர எழுத்தாளராக பணியாற்றினார்.

1982 இல், அவர் விஜேயாபத்திரிகையின் பெண்கள் வார இதழான “சிறிகதா” வின் முதல் ஆசிரியராகவும், மற்றொரு மகளிர் வார இதழான “வனிதா வித்தி”க்கு முதல் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

டி சில்வா இலங்கையில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பங்களித்துள்ளதோடு, பெண்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள், பெண்கள் தங்கள் பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ள நேர்மறை பண்புகளை மற்றும் விழுமியங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதற்காக தனது மகளிர் வாராந்திர, வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களின் மூலம் விழிப்பூட்டினார்.

அவர் நாவல்கள், மொழிபெயர்ப்புகள் மற்றும் குழந்தைகள் புத்தகங்கள் உட்பட 125 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply