முன்னைய நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும் நாடாளுமன்ற வாவியில் தூக்கியெறிந்திருந்தால் அந்த வாவி அசுத்தமடைந்திருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பியகம பகுதியில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
நாட்டை முன்கொண்டு செல்வதானால் முன்னைய நாடாளுமன்றத்தின் 225 பேரையும் தியவன்ன ஓயாவில் தூக்கியெறிய வேண்டும் என்று பலரும் பேசியிருந்தமையை சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு 225பேரையும் தூக்கியெறிந்திருந்தால் தியவன்ன ஓயா அசுத்தமடைந்திருக்கும். அத்துடன் அந்த வாவி தொடர்புபடும் களனி ஆற்றின் நீரும் அசுத்தமடைந்திருக்கும்.
இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த தடவை புதியவர்களை களமிறக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.