லிபிய தலைநகரில் ஆயுதக் குழுக்களுக்கிடையே மோதல் – 27 பேர் பலி!

லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த துப்பாக்கிச் சண்டையில் 106 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அவசர மருத்துவ உதவி பிரிவு அறிவித்துள்ளது.

2011 இல் முயம்மர் கடாபி அகற்றப்பட்டதிலிருந்து அதிகாரத்திற்காக போட்டியிட்ட எண்ணற்ற போராளி குழுக்களில் 444 படைப்பிரிவுக்கும் அல்-ராடா அல்லது சிறப்புத் தடுப்புப் படைக்கும் இடையில் மோதல் ஆரம்பமாகியது.

தலைநகரின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள முன் வரிசைப் பகுதிகளிலிருந்து மொத்தம் 234 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு உட்படுத்தி வருவதாகவும் அந்நாட்டு அவசர மருத்துவ உதவி பிரிவு அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply