தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பதினைந்து வருடங்களின் பின் இன்று தாய் நாடு திரும்பிய நிலையிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 8 வருட சிறைத்தண்டனையை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்த தக்சின் ஷினவாத்ரா, 2006 ஆம் ஆண்டு இராணுவத்தினால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
அதன்பின் அவர் நாட்டிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதேவேளை, தாய்லாந்தில் தக்சின் ஷினவாத்ராவின் கட்சி தற்போது, ஆட்சிப்பொறுப்பை ஏற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் இன்று நாடு திரும்பினார்.
அதன்பின் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, 8 வருட சிறைத்தண்டனையை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.