அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2682 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2674 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த 08 பேரும் கந்தகாடு போதை பொருள் மறுவாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2007 ஆக காணப்படுகின்றது.

அதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும் காணப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir