இலங்கை தாய்லாந்து இடையே ஆரம்பமானது உத்தேச பேச்சுவார்த்தை!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று உத்தேச பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த  பேச்சுவார்த்தை எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது.

அரசியல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, மற்றும் சுற்றுலா உட்பட பரஸ்பரம் உறவுகள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளின் நிலை ஆகியன மதிப்பாய்வு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறித்த உத்தேச பேச்சுவார்த்தையில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் தாய்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் சருண் சரோன்சுவான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான நான்காவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றிருந்தது.

2024 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த கடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply