இலங்கையில் ஊழல் ஒழிப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த இன்னும் 2 மாதங்கள் தேவைப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த இன்னும் 2 மாதங்கள் தேவைப்படும் எனவும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், சட்டம் தொடர்பான பல விதிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும், அதற்கான செயல்முறை தற்போது நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், புதிய சட்டத்தின் அதிகாரங்களுக்கு அமைய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு செயற்படும் எனக் குறிப்பிடடுள்ளார்.
ஊழலுக்கு எதிரான சட்டமூலம் ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல், திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது என அவர் மேசுட்டிக்காட்டியுள்ளார்.