பிரான்ஸ் நாட்டில் முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவினை அந்நாட்டு பாடசாலை மாணவர்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல விடயங்கள் தொடர்பில் நன்கு ஆராய்ந்து பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு தொடர் விசேட வழிகாட்டுதல்களை வழங்கவும் அந்நாட்டு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பிரான்ஸ் அரசாங்கம் 2004 ஆம் ஆண்டு பாடசாலைகளில் தலையை மூடும் வகையில் ஆடைகளை அணிய தடைசெய்ததுடன், 2010 ஆம் ஆண்டில் முழுமையாக முகத்தை மூடுவதைத் தடைசெய்யவும் நடவடிக்கை எடுத்தது என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.