
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 41 அலுவலர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஹோமாகம பொலிஸ் பிரிவில் பெண் அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த 41 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது .
இந்த 41 பேரில் 30 பேர் உதவிக்காவல்துறை அதிபர் அலுவலகத்தில் பணிபுரிகின்றவர்களாவர்.
ஏனைய 11 பேரும் ஹோமாகம காவல்துறை நிலையத்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண் பொலிஸ் அலுவலர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய இராணுவ உறுப்பினரின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.