மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் நாடு எதிர்நோக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய நாடாளுமன்ற அமர்வில் டெஹ்ரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்குவதையும் அந்தப் பணிகளை முகாமைத்துவம் செய்வதற்கும் ஒரு குழுவும், அரச சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பான பணிகளை முகாமைத்துவம் செய்வதற்கு மற்றொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அங்கு மேலும் தெரிவித்தார்.
அத்துடன், எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
