பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி 40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்துடன் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.