கல்வியை வியாபார பண்டமாக்குவதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசாங்கம்!

பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துமனையில் மருத்துகள், ஆய்வுகூடத்துக்குத் தேவையான கருவிகள், இரசாயன பதார்த்தங்கள், கணினிகள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கோ திருத்துவதற்கோ போதிய நிதி இன்றி பல்கலைக்கழகம் நாளாந்தம் திண்டாடுவதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் காலை ஊடக மாநாடு ஒன்றை நத்தியிருந்தது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் புதிய கட்டடங்களையும் விடுதிகளையும் அமைப்பதற்கும், பழைய கட்டங்கள் விடுதிகளை திருத்துவதற்கும் பல்கலைக்கழத்திடம் நிதி இல்லாத நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாக இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் குறைவடையும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் நெருக்கடியான நிலையை உருவாக்கி வரும் அரசாங்கம் தனியார் பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கும் முயற்சியிலும் கல்வியை ஒரு வியாபார பண்டமாக்கும் வகையிலான கொள்கைகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

அது மட்டுமன்றி, உள்நாட்டு கடன் மறு சீரமைப்பு என்ற பெயரில் அனைத்து உழைக்கும் மக்களின் ஈபிஎஃப் மற்றும் ஈரிஎஃப் கணக்குகளிலும் இருக்கும் பணத்தினை கொள்ளையிடும் அரசாங்கத்தின் முயற்சி கல்வித்துறையின் மீதும் நாட்டின் ஏனைய உழைக்கும் மக்களின் மீதும் விழும் பாரிய அடி என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைக்கு எதிராக மாணவர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் மேற்கொண்டு வரும் போராட்டங்களை நசுக்கும் வகையில், புதிய சட்டங்களையும் அரசாங்கம் உருவாக்க முயற்சிக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply