விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரக வின் உதவியாளர்!

இன்றைய தினம் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரக மற்றும் கஹன ஆகியோருடன் தொடர்பை பேணிய நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரை இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

38 வயதுடைய குறித்த சந்தேகத்திற்குரியவர் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து ஒரு கிராமும் 170 மில்லிகிராம் அடங்கிய ஹேரோயின் போதைப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மஹரகமையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக குறித்த சந்தேகத்திற்குரியவர் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir