மூன்று மாடி கட்டிடமொன்றில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை!!

வீடு ஒன்றின் மூன்றாம் மாடி கட்டிடமொன்றில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த நபர் மத்தேகொட, சமகி உயன பிரதேசத்தில் அவரது உறவினர் ஒருவரின் வீடொன்றுக்கு சென்று அங்கு உறவினர்களுடன் மேல் மாடியில் வைத்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

34 வயதுடைய மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில், மத்தேகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir