சரத்வீரசேகர தொடர்பில் அமெரிக்க தூதரகம் அதிரடி நடவடிக்கை!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா வழங்குவதற்கு  அமெரிக்க தூதரகம் தாமதிப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ள இலங்கை நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள சரத் வீரசேகரவிற்கு விசா வழங்க முடியாது அவருக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமியுங்கள் என அமெரிக்கா, இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பில்  சர்ச்சை எழுந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த  விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு தான் கடிதமொன்றை எழுதவுள்ளதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து சபாநாயகர் அமெரிக்க தூதுவரிடம் கலந்துரையாடி விளக்கமொன்றை பெறுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எதிராக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியில் அமெரிக்காவின் பங்கு குறித்த தனது விமர்சனங்களால் அமெரிக்கா அதிருப்தியடைந்திருக்கலாம் எனவும் குறித்த தாமதத்திற்கு இதுவே காரணமாக இருக்கலாம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு விசா வழங்கத் தவறியுள்ளமை குறித்து தெளிவான விளக்கம் வேண்டும் எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply