
சட்டவிரோதமான முறையில் சொகுசு கார் ஒன்றிற்கான பாகங்களை பொருத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு காலி பிரதான நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
இதன்படி, அவர் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த வழக்கை 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மீளப்பெறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.