இலங்கையின் பேச்சு மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரம் குறித்து பிரித்தானியா கேள்வி!

இலங்கை மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் தொடர்பில் பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்ஸுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இலங்கையின் பேச்சு சுதந்திரம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் திறந்த உரையாடலைக் கட்டியெழுப்புவதில் மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளதுடன், இலங்கை முழுவதும் பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply