புகையிரத திணைக்களத்தை ஆணையமாக மாற்றுவதற்கு பதிலாக அதனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றினால், அத்துறையில் பல நெருக்கடிகள் உருவாகும் என சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர வலியுறுத்தியுள்ளார்.
“புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் என்ற வகையில், இந்த அனைத்து விவாதங்களின்போதும் நாங்கள் எங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளோம். ரயில்வே துறையை ஆணையமாக மாற்றுவதை விட, அதை மறுசீரமைப்பதே சிறந்தது என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், புகையிரத சேவை துறையில் சுமார் 19,382 ஊழியர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து பராமரிப்புச் செலவுகளையும் துறையின் லாபத்தில் மட்டுமே ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் ரயில்வே துறை ஏற்கனவே நஷ்டம் தரும் நிறுவனமாக மாறிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.